குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா காலமானார்

by Staff Writer 30-09-2020 | 11:40 AM
Colombo (News 1st) குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா (Sheikh Sabah al-Ahmed al-Sabah) தனது 91 ஆவது வயதில் நேற்று (29) காலமானார். அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃப் அல் அஹ்மத் (83) புதிய மன்னராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் சிகிச்சை பெறுவதற்காக ஷேக் சபா, குவைத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். 2006ஆம் ஆண்டு முதல் குவைத்தில் அவர் ஆட்சி நடத்தினார். 1990, 19991 ஆண்டுகளில் வளைகுடா போர் மூண்டு குவைத்தை ஈராக்கிய படையினர் ஆக்கிரமித்தபோது, ஈராக்கை ஆதரிக்கும் நாடுகளுடனான உறவை மீள கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றினார். வளைகுடா பிராந்தியத்தில் கசப்புணர்வு ஏற்பட்ட போது அவற்றுக்கு மத்தியஸ்தம் செய்து வைக்க அல் சபாவின் தலையீடு முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. குவைத்தில் சபா குடும்பம் கடந்த 260 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.