எலஹர - கிரித்தலே பகுதியில் சட்டவிரோத காடழிப்பை நிறுத்துமாறு உத்தரவு 

by Staff Writer 30-09-2020 | 10:34 AM
Colombo (News 1st) எலஹர - கிரித்தலே பகுதியில் சட்டவிரோத காடழிப்பை நிறுத்துமாறு வனஜீவராசிகள் அமைச்சர் C.B. ரத்நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று (29) பிற்பகல் இது தொடர்பில் அவர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். வனஜீவராசிகள் அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து அமைச்சர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொலன்னறுவை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் W.N.K.S. சந்தரத்ன தெரிவித்துள்ளார். சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி சட்டவிரோதமாக சுத்தமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்துள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் W.N.K.S. சந்தரத்ன குறிப்பிட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு இந்த பகுதி சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மின்னேரியா தேசிய சரணாலயத்திற்கு யானைகள் பிரவேசிப்பதற்கான வழிப்பாதையாகவும் இது காணப்படுகின்றது.

ஏனைய செய்திகள்