English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Sep, 2020 | 1:35 pm
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி, மூலதனச்சந்தை, பொது முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாத் துறையை தவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளும் தற்போது சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு 91 வீதமாக காணப்பட்ட தலா தேசிய உற்பத்திக்கான கடன் 2014 ஆம் ஆண்டு 70 வீதமாக குறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது தலா தேசிய உற்பத்திக்கான கடன் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
ஆகவே, கடன் தொகையை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
24 May, 2022 | 06:08 AM
26 Apr, 2022 | 06:59 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS