பிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

பிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

பிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2020 | 7:42 pm

Colombo (News 1st) மூன்று தடவைகள் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலில் ஏற்பட்ட காயத்தினால் பிரெஞ்சு பகிரங்கத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

39 வயதான செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் பல்கேரியாவின் ஸவெட்டானா பிரொன்கோவாவை (Tsvetana Pironkova) இன்றைய தினம் சந்திக்கவிருந்தார்.

கடந்த மாதம் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்காவினால் (Victoria Azarenka) தோற்கடிக்கப்பட்ட போது செரீனா வில்லியம்ஸிற்கு கணுக்காலில் உபாதை ஏற்பட்டது.

இதிலிருந்து குணமடைந்து, பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் இணைந்து கொண்டிருந்த அவர், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற முதலாவது சுற்று ஆட்டத்தில் மற்றுமொரு அமெரிக்க வீராங்கனையைத் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

இருந்த போதிலும் தாம் உடல் உபாதைக்கு உள்ளாகியிருப்பதாக அவர் அன்றே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்