தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 343 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 343 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 343 பேர் வீடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2020 | 3:33 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 343 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 154 பேரும் ரந்தம்பே தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 150 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதுவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட 46,673 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.

74 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,132 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை நாட்டில் 3,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 3,230 பேர் குணமடைந்துள்ளனர்.

131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்