சோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா

சோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா

சோனு சூட்டிற்கு விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2020 | 3:50 pm

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்த இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது, விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழைகளுக்கு உதவியது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்நிலையில், சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை இதற்கு முன், பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியானார்டோ டிகாப்ரியோ, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்