சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பின் போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது

சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பின் போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது

சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பின் போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2020 | 4:17 pm

Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கல்கிசையில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கல்கிசை – ரஷ்டம்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய சந்தேகநபர் கல்கிசை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை – ரஷ்டம்வத்தையைச் சேர்ந்த 21 மற்றும் 40 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 9.45 அளவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் கல்லெறிந்துள்ளனர்.

இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்