கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2020 | 10:23 pm

Colombo (News 1st) போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா. அரியநேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு கிளையில் இன்று முறைப்பாட்டினை பதிவு செய்தனர்.

திலீபனின் நினைவேந்தலை ஏற்பாடு செய்ததாகக் கூறி தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஞா. சிறிநேசன் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்