by Staff Writer 30-09-2020 | 2:23 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உற்பத்திகளுக்கு தீர்வை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு உலக வர்த்தக ஸ்தாபனம் அங்கீகாரமளித்துள்ளது.
அமெரிக்காவின் விமானத் தயாரிப்பு நிறுவனம் Boeing இற்கு வழங்கப்படும் மானியங்களுக்கு எதிரான பதிலடியாக இந்தத் தீர்வை விதிப்பு மேற்கொள்ளப்படுவதாக விடயங்களுடன் சம்பந்தமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான வர்த்தக மோதல்களுக்கான சந்தர்ப்பத்தை இந்த தீர்வைகள் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஐரோப்பாவின் விமானத் தயாரிப்பு நிறுவனமான எயார்பஸ் - போயிங் ஆகிவற்றிற்று இடையிலான வர்த்தகப் போட்டியில், போயிங்கிற்கு ஆதரவு வழங்குவதற்காக 7.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஐரோப்பிய உற்பத்திகளுக்கு தீர்வை விதிக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா கடந்த ஆண்டு ஆரம்பித்திருந்தது.
இந்தச் செயற்பாட்டுக்கு பதிலடியாகவே உலக வர்த்தக ஸ்தாபனத்தின் அங்கீகாரத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க உற்பத்திகளுக்குத் தற்போது தீர்வை விதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.