MCC தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்கிறார் பிரதமர்

by Staff Writer 29-09-2020 | 8:25 PM
Colombo (News 1st) MCC ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இலத்திரனியல் ஊடக செய்திப் பிரிவு தலைவர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களை சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் 20 ஆவது திருத்தம் தொடர்பாக அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. 20 ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் குழுக்களை நியமித்து ஆராய்ந்துள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார். அமைச்சரவையிலும் ஆளும் கட்சி குழுக் கூட்டத்தின் போதும் இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதியில் அரசாங்கத்தின் நிலைப்பாடு நாட்டிற்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.