தென்னை செய்கையினை விஸ்தரிக்க வேண்டும்: நாமல் கருணாரத்ன

by Staff Writer 29-09-2020 | 8:47 PM
Colombo (News 1st) தேங்காயின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை இன்று விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பில் கமநல சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன குருநாகலில் இன்று கருத்துத் தெரிவித்தார்.
இன்று மலரும் தென்னம் பூ தேங்காயாக உருவாவதற்கு 44 மாதங்களாகும். நான்கு வருடங்கள் அதற்குத் தேவையாக உள்ளது. நாங்கள் மழைவீழ்ச்சி தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது 2016 ஆம் ஆண்டு குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை தொடர்பில் அறிய முடிந்தது. குரும்பைகள் உருவாகும் போது தென்னைக்கு பாரிய நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தக் குரும்பைகள் பாரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இதன் காரணமாக குறைந்தளவிலான அறுவடையே அந்த காலப்பகுதியில் கிடைத்துள்ளது. மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும். தென்னை செய்கையினை ஆரம்பித்து அதனை விஸ்தரிக்க வேண்டும். மரங்களை வெட்டுவது தொடர்பான சட்டத்தில் தென்னை மரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
என நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்