மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2020 | 7:24 am

Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

சுப்பர் ஓவரில் வௌிக்காட்டிய திறமையால் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

பெங்களூர்ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஏரோன் பின்ச் 35 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினார்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி 03 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

20 வயதான Devdutt Padikkal அரைச்சதம் கடந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலளித்தாடிய முப்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்த நிலையில் 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதெவ் எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷான் 58 பந்துகளில் 99 ஓட்டங்களை விளாசி அணிக்கு பலம் சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரு அணிகளும் 201 ஓட்டங்களை பெற்றுக் கொண்டன.

போட்டியின் வெற்றியை நிர்ணயிப்பதற்காக சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதன்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 08 ஓட்டங்களை பெற்றதுடன் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 11 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்