நாட்டில் இதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு: 6,882 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நாட்டில் இதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு: 6,882 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நாட்டில் இதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு: 6,882 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2020 | 5:06 pm

Colombo (News 1st) நாட்டில் இதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (28) 1,203 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக COVID-19 ஒழிப்பு தேசிய படையணி தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றினால் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த 97 பேர் இன்று நாடு திரும்பினர்.

இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 297 பேர் இன்று வீடு திரும்பினர்.

இதற்கமைய, இதுவரை 46,330 பேர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 75 கண்காணிப்பு நிலையங்களில் 6,882 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளதாக COVID-19 ஒழிப்பு தேசியப் படையணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 648 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், கொரோனா நோயாளர்கள் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்