கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது

கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது

கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2020 | 9:23 am

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜயவர்தனபுர கலால் சுற்றிவளைப்பு பிரிவின் கட்டுப்பாட்டாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கொஸ்கம – களுஅக்கல பகுதியில் நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல பகுதியிலிருந்து லபுகம நோக்கி பயணித்த கார் ஒன்றை சோதனையிட்ட போது, போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கடத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மற்றுமொருவர் ஹங்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் கடந்த 23 ஆம் திகதி கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவரினூடாக போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டுப்பாட்டாளர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து மென்டஸ் ரகத்தை சேர்ந்த 653 கிராம் 380 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் கார் ஒன்றும் 05 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்