கண்டி – பூவெலிகட இடிபாடு: கட்டட உரிமையாளர் கைது 

கண்டி – பூவெலிகட இடிபாடு: கட்டட உரிமையாளர் கைது 

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2020 | 12:17 pm

Colombo (News 1st) கண்டி – பூவெலிகட பகுதியில் நிலம் தாழிறங்கிய வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போது இன்று (29) முற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அநுர லெவ்கேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கண்டி – பூவெலிகட சங்கமித்தா வீதியிலிருந்த 05 மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் சிசு ஒன்றும் சிசுவின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்