அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை

அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை

அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Sep, 2020 | 11:13 am

Colombo (News 1st) ஹோட்டலொன்று தொடர்பில் எதிர்மாறான கருத்துகளை பதிவிட்ட அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் 2 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாம் தங்கியிருந்த ஹோட்டல் தொடர்பிலேயே குறித்த நபர் மாறான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தாய்லாந்தில் நடைமுறையிலுள்ள கடுமையான அவதூறு எதிர்ப்பு சட்டங்களின் கீழ் அந்த ஹோட்டலினால் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே Wesley Barnes என்ற குறித்த அமெரிக்க பிரஜைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தாய்லாந்தில் பணியாற்றி வருபவர் என்பதுடன், தாம் தங்கியிருந்த ஹோட்டல் தொடர்பில் பல்வேறு தளங்களில் வெவ்வேறான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

குறித்த ஹோட்டலை நவீன யுகத்தின் அடிமைத்தளம் எனவும் அவர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்