by Staff Writer 28-09-2020 | 2:54 PM
Colombo (News 1st) தலங்கம - தலாஹேன பகுதியில் 60 வயது பெண்ணொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உறவினர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டை சமாதானப்படுத்த வந்த பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் படுகாயமடைந்த நிலையில் கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.