வெனிசூலாவில் கொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு

வெனிசூலாவில் கொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு

வெனிசூலாவில் கொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Sep, 2020 | 3:34 pm

Colombo (News 1st) வெனிசூலாவில் கடற்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 200 மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

முகக்கவசம் மற்றும் கையுறைகள் எதுவுமின்றி வாரக்கணக்கில் தாம் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெனிசூலா மருத்துவப் பணியாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வெனிசூலா முழுவதிலும் மருத்துவ பணியாளர்களை சந்தித்த BBC குழுவிடம், அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பணி புரியும் இடத்தில் தமக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் பணியாற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்ததாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.

வெனிசூலாவில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 606 பேர் உயிரிழந்துள்ளதோடு, 72,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்