போதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு 

by Staff Writer 28-09-2020 | 2:35 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து ஹெரோயின் கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (28) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்