ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது 

ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது 

ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2020 | 5:31 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பகுதியில் 5,000 கிலோகிராமிற்கும் அதிக கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், லொறியொன்றினூடாக கழிவுத் தேயிலையை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெலிகம பகுதியில் 446 கிலோகிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து சிலிண்டர், அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்