நாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள்...

நாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

by Staff Writer 27-09-2020 | 12:27 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,349 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (26) கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டனர். கத்தாரிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த மூவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களென COVID - 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வௌிநாட்டில் தங்கியிருந்த 90 பேர் இன்று (27) நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக COVID - 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் கூறியுள்ளது. முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் 467 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே நேற்று 1,520 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 279,740 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக COVID - 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்