கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இங்கிலாந்துக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை

கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இங்கிலாந்துக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை

கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இங்கிலாந்துக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2020 | 9:29 am

Colombo (News 1st) கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கழிவுகள் அடங்கிய கொல்கலன்கள் கொண்டுவரப்பட்டன.

2016 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த கொள்கலன்களில் பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் காணப்பட்டமை முதற்கட்ட விசாரணையின்போது தெரியவந்தது.

அவற்றில் 21 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அவற்றை மீளவும் இங்கிலாந்துக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கழிவுகளுடன் தொடர்புடைய இங்கிலாந்து நிறுவனங்களிடம் நட்ட ஈட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்