442 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

442 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

442 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2020 | 5:05 pm

Colombo (News 1st) 442 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை விரைவில் வழங்கத் தயாராகவுள்ளதாக MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அறிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

தீ பரவிய கப்பலின் உரிமையாளர்கள் 400 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை செலுத்த வேண்டும் என சட்ட மா அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்காக செயற்பட்ட இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை, இலங்கை கடற்படை, விமானப்படை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு முகவர் நிலையம் ஆகியவற்றிற்கு மீள செலுத்துவதற்காக இந்த நட்டஈட்டு தொகை கோரப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், MT New Diamond கப்பலை 200 கடல் மைல் தொலைவிற்கு கொண்டு செல்லுமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்