ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறும்

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறும்: ஜப்பான் பிரதமர்

by Bella Dalima 26-09-2020 | 5:42 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலால் நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு கோடையில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடம் ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சபை மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூடிய போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 2021-இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அது மனிதகுலம் தொற்றுநோயைத் தோற்கடித்தது என்பதற்கான சான்றாக அமையும் என்றும் சுகா தெரிவித்துள்ளார்.