போலி சான்றிதழ்கள் விநியோகம்: ஒருவர் கைது

மருதானையில் போலி சான்றிதழ்களை விநியோகிக்கும் கச்சேரி சுற்றிவளைப்பு: ஒருவர் கைது

by Staff Writer 26-09-2020 | 4:02 PM
Colombo (News 1st) மருதானை - மாளிகாகந்த பகுதியில் போலி சான்றிதழ்களை விநியோகிக்கும் கச்சேரி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்த 227 போலி இறப்பர் முத்திரைகள், 42 போலி கடிதத் தலைப்புகள், 300 வௌிநாட்டுக் கடவுச்சீட்டுகள், 9 தேசிய அடையாள அட்டைகள், மடிக்கணினி, ஸ்கேனர், பிரின்டர் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊழல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.