by Bella Dalima 26-09-2020 | 4:53 PM
Colombo (News 1st) கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (25) வௌியிடப்பட்ட அரசு குடும்பத்து ஆண்டுக் கணக்கு விபரங்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளமையால் அரச குடும்பத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியில் 1.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை உள்ளது. மேலும், 10 ஆண்டுகளில் 2.5 கோடி பவுண்ட் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என கணக்கு விபரங்கள் தெரிவிக்கின்றன.