பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகளைப் பெற்றுக்கொடுக்க தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகளைப் பெற்றுக்கொடுக்க தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகளைப் பெற்றுக்கொடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2020 | 3:37 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகளுக்கான பிரச்சினைக்கு தீர்வாக தற்காலிகமாக வாடகை வீடுகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரியவிலுள்ள மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தின் ஒரு பகுதியை வாடகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மிக விரிவாக ஆராயப்பட்டதாக பாராளுமன்றத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

மூன்று மாதங்களுக்கு மாத்திரம் குறித்த கட்டடத்திலுள்ள விடுதிகளை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு உள்ள இயலுமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் 120 மாத்திரமே காணப்படுகின்றன.

அவற்றில் 100 வீடுகள் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் காணப்படும் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 35 பேர் மாத்திரமே தற்போது வீடுகளை மீள கையளித்துள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வீடுகளை மீள கையளிக்காமையால், இம்முறை புதிதாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சில வீடுகளை புனரமைக்க வேண்டியுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதவர்களின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துவது தொடர்பிலும் நேற்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்