தேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு

தேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு

தேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2020 | 3:54 pm

Colombo (News 1st) தேங்காய்க்கான நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

நேற்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிர்ணய விலையை அறிவித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12 அங்குலம் சுற்றளவுக்கு குறைந்த தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 60 ரூபாவாகும்.

13 அங்குலத்திற்கு மேற்பட்ட சுற்றளவைக் கொண்ட தேங்காய் ஒன்றுக்கான விலை 70 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்யக் கூடாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்