தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2020 | 10:21 pm

Colombo (News 1st) தமிழ் மக்களுக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் அரசியல் கட்சிகள், தமது மக்களுக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் என இதன்போது வலியுறுத்தின.

யாழ். சாவகச்சேரி வாரிவானேஸ்வரர் ஆலய முன்றலில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்