உக்ரைனில் இராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 22 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைனில் இராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 22 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைனில் இராணுவ விமானம் வெடித்துச் சிதறியது: 22 வீரர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Sep, 2020 | 4:36 pm

Colombo (News 1st) உக்ரைனில் விமானப்படை வீரர்களை ஏற்றிச்சென்ற இராணுவ விமானம் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியதில் 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ விமானத் தளத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உக்ரைனின் மாநில அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் நேற்று (25) மாலை விமானப்படை வீரர்களை ஏற்றிச்சென்ற AN-26 என்ற இராணுவ விமானம் வடகிழக்கு உக்ரைனின் தேசிய நெடுஞ்சாலை அருகே வெடித்துச் சிதறி விபத்திற்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணித்த 22 வீரர்களும் உயிரிழந்ததாக ஆயுதப்படை ஊழியர் ரஸ்லான் தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக விமானம் வீழ்ந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.

விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்