அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

by Staff Writer 25-09-2020 | 3:40 PM
Colombo (News 1st) 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைகளில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்வதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் அரிசியை லக் சதொச ஊடாக விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை இலக்கு வைத்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 44 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.