by Staff Writer 25-09-2020 | 8:36 PM
Colombo (News 1st) சுதந்திரக் கட்சி மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தயாராக வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற S.W.R.D. பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்வின் போது அவர் இதனை தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.
பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் அதன் பின்னர் பண்டாரநாயக்கவின் கொள்கைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.