யாழ் தேவி தடம்புரண்டது: வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

யாழ் தேவி தடம்புரண்டது: வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

யாழ் தேவி தடம்புரண்டது: வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2020 | 3:26 pm

Colombo (News 1st) அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் யாழ் தேவி கடுகதி ரயில் தடம்புரண்டுள்ளது.

இதனால் வடக்கு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளதைத் தொடர்ந்து, ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், மதவாச்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்