by Staff Writer 25-09-2020 | 3:32 PM
Colombo (News 1st) கண்டி - உடுதும்பர, கலல்கமுவ பகுதியில் சிறுத்தையொன்றை கொலை செய்து இறைச்சியை விற்பனை செய்வதற்கு முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி பொறியில் சிக்கிய சிறுத்தை நேற்றிரவு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சாக்குகளில் இறைச்சி பொதியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கலல்கமுவ பகுதியைச் சேர்ந்த 31, 35, 44 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்