ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம்

by Bella Dalima 24-09-2020 | 3:30 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வட கிழக்கே 237 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இதேபோன்று, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய பிற விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.