மீன் லொறியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சா பொலிஸாரிடம் சிக்கியது 

மீன் லொறியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சா பொலிஸாரிடம் சிக்கியது 

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2020 | 10:35 am

Colombo (News 1st) மீன் லொறியொன்றில் மறைத்து வைத்து 103 கிலோகிராம் கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இருவர் மன்னார் – மடு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடு – புஞ்சிக்குளம் பொலிஸ் வீதித் தடையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

103 கிலோகிராம் நிறையுடைய 49 பொதிகள் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டிய பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்