பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு 

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2020 | 7:23 am

Colombo (News 1st) பாதாளக் குழு குற்றங்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ‘ரத்மலானை ரொஹா’ இன்று (24) அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் கொச்சிக்கடை – கம்மல்தொட்ட பகுதியில் மறைந்திருந்த போதே மேல் மாகாணத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து T 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்