நாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 24-09-2020 | 7:31 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,324 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (23) 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ரஷ்ய விமான ஊழியர் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேர் எத்தியோப்பிலிருந்து திரும்பிய ஒருவர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.