நாட்டில் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு 

by Staff Writer 24-09-2020 | 8:10 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் உரம் உற்பத்தி தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவிடம் வினவியபோது 275,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். யூரியா உரத்தை பயன்படுத்தி கலப்பு உர வகையொன்றும் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார். தற்போது அந்த கலப்பு உரத்தை தயாரிப்பதற்கும் யூரியா உரம் பற்றாக்குறையாக உள்ளதாக மகேஷ் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார். இந்தியாவிடமிருந்து பெருந்தொகையான உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் யூரியா உர பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் உரம் உற்பத்தி தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.