எதிர்வரும் ஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை 

எதிர்வரும் ஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை 

எதிர்வரும் ஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை 

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2020 | 10:03 am

Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொட்டன் பட்டுக்காக (Cotton Bud) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய், ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக
அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொட்டன் பட்டை, சுகாதார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்தலே இந்த நடவடிக்கையின் நோக்கம் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்