மக்களை நேரில் சென்று சந்திக்க ஜனாதிபதி உத்தேசம் 

மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி நேரடியாக கேட்டறிய உத்தேசம் 

by Staff Writer 23-09-2020 | 7:08 AM
Colombo (News 1st) மக்கள் மத்திக்கு சென்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு துரித தீர்வினை வழங்குவதற்காக கிராமங்கள் தோறும் விஜயம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தேசித்துள்ளார். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாக கண்டு அவர்களின் குறைகளை கேட்டறிய ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டறிந்து சரியான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு ஜனாதிபதி நிவாரணங்களை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைகளை கேட்டறியும் ஜனாதிபதியின் முதலாவது விஜயத்திற்காக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு ஹப்புத்தலை நூறு ஏக்கர் கிராமத்திலுள்ள குமாரதென்ன வித்தியாலயத்தில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (25) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.