பண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்

by Staff Writer 23-09-2020 | 5:18 PM
Colombo (News 1st) பண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. கட்டடத்தின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள ஹோட்டலிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்கும் பணியில் பண்டாரவளை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயினால் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.