by Staff Writer 23-09-2020 | 4:49 PM
Colombo (News 1st) ஊவா, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை (24) நண்பகல் 12 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் எனவும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என்பதால், எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.