அமெரிக்க ஜனாதிபதி சீனா மீது குற்றச்சாட்டு

சீனா பொறுப்பு கூற வேண்டும் - ட்ரம்ப் வலியுறுத்தல்

by Chandrasekaram Chandravadani 23-09-2020 | 8:56 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா மீது குற்றஞ்சுமத்தியுள்ளார். நியூயோர்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் வருடாந்த மாநாட்டில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொரோனா தொற்று தொடர்பில் சீனா பொறுப்பு கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், எந்த நாட்டுடனும் பனிப்போரில் ஈடுபட தமது நாடு எதிர்பார்க்கவில்லை என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.