கத்தாரிலுள்ள இலங்கை தூதரக ஊழியருக்கு கொரோனா 

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது 

by Staff Writer 23-09-2020 | 8:25 AM
Colombo (News 1st) கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (22) முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் அவசர சேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிவிக்கப்பட்டுள்ளது.