முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2020 | 7:55 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இளங்கோபுரத்தில் நேற்றிரவு ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயதான குடும்பஸ்தர் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராமத்தில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மதுபான உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்று அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றை அனுப்பியமை தொடர்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்