இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2020 | 8:01 pm

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா B. டெப்லிட்ஸ் இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பாடசாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆங்கில பாடநெறிகளை நடத்துவதற்கு தூதரகத்தினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் ரஜகல தொல்பொருள் பகுதியை வழமை நிலமைக்கு கொண்டு வந்து, பாதுகாப்பதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அலைனா B. டெப்லிட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உலகில் கலாசார ரீதியாக முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதாக அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்