by Bella Dalima 22-09-2020 | 3:48 PM
இத்தாலியில் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் கலந்து கொண்டு தமது தீர்மானத்தை வௌிப்படுத்தியுள்ளனர்.
இத்தாலியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் இந்த வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதற்கு அந்நாட்டு மக்கள் ஒப்புதலளித்துள்ளனர்.
வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அளிக்கப்பட்ட வாக்குகளில் 70 வீதமானவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன.
இரு சபைகளைக் கொண்ட இத்தாலிய பாராளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 634 இலிருந்து 400 ஆகக் குறைக்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக இத்தாலிய பாராளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படவுள்ளது.
இத்தாலியின் மக்கள் பிரதிநிதிகள் கொண்டுள்ள அதிகரித்த செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.