பாராளுமன்றத்திற்கு அதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை

by Staff Writer 22-09-2020 | 7:42 PM
Colombo (News 1st) தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்திற்கு இன்று அணிந்து சென்ற ஆடை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் கலாசார ஆடை அணிய முடியாது என எதிர்க்கட்சியின் சிலர் கடும் எதிர்ப்பு வௌியிட்டனர். இதேவேளை, ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் இன்று அணிந்து வந்த ஆடையை ஏற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் அதே ஆடையில் பிற்பகல் அமர்வுகளில் கலந்துகொண்டார்.