மஸ்கெலியாவில் பெண் சிறுத்தை சுட்டுக் கொலை

மஸ்கெலியாவில் பெண் சிறுத்தை சுட்டுக் கொலை

மஸ்கெலியாவில் பெண் சிறுத்தை சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2020 | 1:22 pm

Colombo (News 1st) தலையில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்த பெண் சிறுத்தையின் உடல் மஸ்கெலியா – பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

தோட்டத்தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.

பெண் சிறுத்தையின் தலை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண் சிறுத்தையின் உடல் ரந்தெனிகல கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மலையகத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 20 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்